இந்தியா

ஆளுநருக்கே உத்தரவிடும் அதிகாரம் எடியூரப்பாவுக்கு இருக்கா? சர்ச்சை கிளப்பும் கடிதம்!

Published

on

கர்நாடக முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எடியூரப்பா ஆளூநர் வஜுபாய் வாலாவுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்ததையடுத்து பாஜகவின் எடியூரப்பா உடனடியாக ஆட்சியமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆலோசனை, கூட்டங்கள் என தாமதமாகிக்கொண்டே போன ஆட்சி மாற்றம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை இன்று சந்தித்த எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா அளித்த கடிதத்தில் உள்ள வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஆட்சி அமைக்க எங்களை அழைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பது போலதான் ஆளுநருக்கு கடிதம் அளிப்பார்கள். ஆனால் இந்த மரபை மீறி எடியூரப்பா இன்று அளித்த கடிதத்தில், தான் பதவியேற்க போகும் நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, நான் பதவியேற்க தேவையானவற்றை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று ஆளுநருக்கே உத்தரவிடவது போல அமைந்துள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இந்த கடிதம் வைரலாக பரவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version