தமிழ்நாடு

ஆண்டுக்கு ஒரு முறை நள்ளிரவில் மட்டுமே பூக்கும் பூ: கோவை அருகே அதிசயம்!

Published

on

ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டும் பூக்கும் அதிசய மலர் நிஷாகந்தி மலரை கோவை மாவட்டம் அன்னூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் சிஎஸ்ஆர் நகரில் வசிக்கும் சின்னசாமி என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக நிஷாகந்திப் பூ செடியை வளர்த்து வந்தார். இந்த செடியில் பூ பூக்கும் காட்சியை காண அவரது குடும்பத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் நேற்று அந்த அதிசயம் நிகழ்ந்தது.

தங்கள் வீட்டு தோட்டத்தில் நிஷாகந்தி மலர் பூத்திருப்பதை சின்னச்சாமி குடும்பத்தினர் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தனர். இந்த நிஷாகந்தி மலர் வெள்ளை நிறத்தில் மிகவும் அழகாக தோன்றியதை அடுத்து சின்னச்சாமி குடும்பத்தினர் மட்டுமின்றி அக்கம்பக்கத்தினரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும் பூத்துக்குலுங்கும் அதிசய மலரை ரசித்ததோடு ஆரத்தி எடுத்து பக்தி பரவசத்தில் அப்பகுதியினர் வழிபட்டனர்.

இதுகுறித்து சின்னச்சாமி குடும்பத்தினர் கூறியபோது, மூன்று வருடங்களாக நிஷாகந்தி மலர் பூப்பதை பார்ப்பதற்கு காத்திருந்த நிலையில் தற்போது பூ பூத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பூ மிகவும் அழகாக தூய வெள்ளை நிறத்தில் உள்ளது. இந்த பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும், சூரிய ஒளி வந்தவுடன் தானாகவே சுருங்கிவிடும். ஒரே ஒரு நாள் மட்டுமே இந்த போ உயிரோடு இருக்கும் என்று கூறினர்.

இமயமலையில் அதிகமாக காணப்படும் நிஷாகந்திப் பூ இரவில் மலர்ந்து அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே வாடிவிடும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அபூர்வ மலரை தங்கள் வீட்டில் உள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக சின்னசாமி குறிப்பிட்டுள்ளனர். இந்த மலரை அதிர்ஷ்ட மலராக தாங்கள் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version