சினிமா செய்திகள்

தையலுக்கு பதில் ஸ்டேப்ளர் பின்? யாஷிகா வெளியிட்ட வீடியோ வைரல்!

Published

on

சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அறுவை சிகிச்சைக்கு பின் தையலுக்கு பதிலாக ஸ்டேப்ளர் பின் மாட்டப்பட்டது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாஷிகா மற்றும் அவரது தோழி, ஆண் நண்பர்கள் ஆகியோர் புதுச்சேரி சென்று விட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் யாஷிகாவுக்கு ஒருசில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்பட்டது.

யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள வீடியோவில் அறுவை சிகிச்சைக்கு பின் தையலுக்கு பதிலாக ஸ்டேப்ளர் பின் போடப்பட்டுள்ளது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

யாஷிகா முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்ப 3 மாதங்கள் ஆகும் என்றும் அவர் முன்பு போல் பழைய நிலை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும் மருத்துவர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version