சினிமா செய்திகள்

3 மாதங்களுக்கு பின் அடியெடுத்து வைத்த யாஷிகா: வைரல் வீடியோ!

Published

on

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்பது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அவரது உடல் படிப்படியாக தேறி வந்தது என்பதும் அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது என்பதும் செய்திகள் வெளியானது. முழங்கால் மற்றும் முதுகுத் தண்டில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்து தற்போது அவர் குணமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது அவர் எழுந்து நடமாடும் முயற்சியில் உள்ளார். பிசியோதெரபி நிபுணர்கள் அவருக்கு நடப்பதற்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவில் 95 நாட்களுக்கு பிறகு அனைவரதும் பிரார்த்தனை மற்றும் மன உறுதி காரணமாக தற்போது என்னுடைய பாதத்தில் சிறிது வலிமை ஏற்பட்டுள்ளது. எனக்கு மருத்துவம் செய்த டாக்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து யாஷிகா விரைவில் எழுந்து நடமாட வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version