சினிமா செய்திகள்

யாஷிகாவுக்கு திடீர் திருமணம்: மாப்பிள்ளை யார் என்பது சஸ்பென்ஸ்!

Published

on

இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2 உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான நடிகை யாஷிகாவுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘இதுதான் திருமணம் செய்வதற்கு சரியான நேரம் என்றும் இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் எனக்கு லவ் எல்லாம் செட் ஆகாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் எனது திருமணத்திற்கு உங்கள் அனைவரின் ஆசி தேவை என்றும் திருமணத்துக்கு பின்னரும் உங்களை மகிழ்விக்க தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று கூறியுள்ளார் .

இருப்பினும் மாப்பிள்ளை யார் என்பதை அவர் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்று கூறப்படுவதால் அவரது சொந்த ஊரை சேர்ந்த உறவினர் தான் மாப்பிள்ளை என்று கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version