சினிமா செய்திகள்

‘கேஜிஎப் 2’ வெற்றி கொண்டாட்டத்தின்போது மனைவிக்கு முத்தம் கொடுத்த யாஷ்: வைரல் புகைப்படங்கள்

Published

on

இரண்டு நாள் ஓடி விட்டாலே ஒரு திரைப்படத்தின் வெற்றி விழாவை போலியாக கொண்டாடி வரும் நிலையில் ‘கேஜிஎப் 2’ திரைப்படக் குழுவினர் உண்மையாகவே அந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி வருகின்றனர் .

ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் எடுத்த இந்த திரைப்படம் ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உண்மையான வெற்றி படம் என்பதை நிரூபணம் செய்துள்ளது .

இந்த நிலையில் ‘கேஜிஎப் 2’படக்குழுவினர் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தை சமீபத்தில் நடத்தினார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது படக்குழுவினர் அனைவரும் இணைந்து புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் ‘கேஜிஎப் 2’வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கடற்கரை பின்னணியில் தனது மனைவியை ராதிகாவுக்கு ரொமான்ஸாக யாஷ் முத்தம் கொடுத்த புகைப்படங்களை அவரது மனைவி ராதிகா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் ‘கேஜிஎப் 3’படத்தின் கதை தயார் ஆகிவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version