உலகம்

கடைசியில் இந்த நிறுவனத்திலும் வேலைநீக்க நடவடிக்கை.. 1600 பேர் வேலை காலி..!

Published

on

கூகுள் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்த நிலையில் பழம்பெறும் நிறுவனங்களில் ஒன்றான யாகூ நிறுவனமும் 1200 பேர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 வருடங்களுக்கு முன் இணையத்தை பயன்படுத்தியவர்களுக்கு யாகூ நிறுவனம் என்றால் என்னவென்று தெரியும் என்பதும் இன்றும் பலர் யாஹூ மெயிலை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு இணையத்தை மக்கள் மத்தியில் முதல் முதலாக அறிமுகம் செய்த யாஹூ நிறுவனம் தற்போது 20% ஊழியர்களை அதாவது 1600 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது.

#image_title

முதல் கட்டமாக 12 சதவீத ஊழியர்கள் அதாவது 1000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அடுத்த ஒரு சில மாதங்களில் 8% ஊழியர்கள் அதாவது 600 ஊழியர்கள் பணி நீக்கம் செய்வார்கள் என்றும் யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் யாஹூ நிறுவனம் தனது விளம்பர வணிகத்தின் ஒரு பகுதியை மூட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து யாஹூ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறிய போது ‘எங்கள் நிறுவனத்தின் விளம்பர தொழில் உத்தியை மேம்படுத்த உள்ளோம், விளம்பர தொழில்நுட்ப துறையில் போட்டியிடுவதை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள உள்ளோம், அதனால் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வேலைநீக்க நடவடிக்கை எடுப்பது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத ஒரு நடவடிக்கை என்றும் மிகுந்த மன வலியுடன் தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மெட்டா, ஆல்ஃபபெட், மைக்ரோசாப்ட் ,அமேசான், டிஸ்னி உள்பட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததாக அவ்வப்போது செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த பட்டியலில் யாஹூ நிறுவனம் சேர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version