இந்தியா

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது யாஹூ: பயனாளிகள் அதிர்ச்சி!

Published

on

இன்று முதல் தங்கள் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது அதன் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய சமூக வலைதள கொள்கையை வெளியிட்டது என்பதும் இந்த கொள்கை குறித்து ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கொள்கை தங்கள் நிறுவனத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதால் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இன்று முதல் கிரிக்கெட், பொழுதுபோக்கு, செய்தி, பைனான்ஸ் இந்தியா உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் யாஹூ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யாஹூ நிறுவனம் கொடுத்த விளக்கத்தில், ‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள டிஜிட்டல் மீடியாகளுக்கான புதிய கொள்கை தங்களைப் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளை கட்டுப்படுத்துவதாக தெரிகிறது. இதனால் டிஜிட்டல் கண்டன்ட் மீடியாவில் இருந்து முழுமையாக வெளியேறிகிறோம்.

மத்திய அரசின் புதிய கொள்கை தங்கள் நிறுவனத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதால் இந்தியாவில் இருந்து வெளியேறியதாகவும் இந்த புதிய சட்டம் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இந்தியாவில் ஒழுங்குமுறை சட்டங்களால் யாஹூ நிறுவனம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் இந்தியாவில் இருந்து வெளியேறுவது தவிர வேறு வழியில்லை என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் யாஹூ மெயில் இந்தியாவில் தொடர்ந்து இயங்கும் என்றும் யாகூ மெயில் புதிய கொள்கையை கட்டுப்படுத்தாது என்றும் அதனால் யாஹூ மெயில் பயனாளிகள் கவலைப்பட தேவையில்லை என்றும் யாஹூ விளக்கமளித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version