சினிமா செய்திகள்
”யார்ரா கோமாளி” செகண்ட் சிங்கிள் இன்று ரிலீஸ்!
![D_pdN8rU4AU12Yl - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/D_pdN8rU4AU12Yl.jpg)
ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் இடம்பெற்றுள்ள “யார்ரா கோமாளி” பாடல் இன்று வெளியாகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஆதிகால மனிதன் முதல் ஆண்ட்ராய்ட் கால இளைஞனாக வரை ஜெயம் ரவி நடித்துள்ளார். கோமாளி என்ற டைட்டிலுக்கு ஏற்ற டைட்டில் பாடலாக இந்த பாடல் அமையும் என்பதால், மிகவும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.