இந்தியா

சியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடிகள் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Published

on

சியோமி நிறுவனத்தின் 5,551 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனமான சியோமி நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்தியா உள்பட பல நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள இந்நிறுவனம் தயாரிக்கும் செல்போன்கள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சியோமி செல்போன் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 5,551 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும், இதனால் அந்நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5,551 கோடி முடக்கப்பட்டதாகட்வும், சட்டவிரோத பண மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி ஆனது அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன நிறுவனத்தின் மீது இந்திய அமலாக்கத் துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version