தொழில்நுட்பம்

Redmi 9 Power இந்தியாவிற்கு எப்போ வரும்? அறிமுக தேதி அறிவிப்பு!

Published

on

இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் அண்மையில் டெ்மி நோட்9 4ஜி என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதே மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரெட்மி 9 பவர் என்ற பெயரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான எம்ஐ தளத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் கேமராவும், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 64ஜிபி 128ஜிபி என இரண்டு விதமான மெமரி வேரியண்டுகளில் வெளிவரலாம். விலையும் அதற்கு தகுந்தாற் போல் பட்ஜெட் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC பிராசசர் இருக்கலாம் என்றும், இதில் 6000 mAh சக்தி கொண்ட பெரிய பேட்டரி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் எம்ஐ இணையதளத்தில் விரவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version