இந்தியா

பாஜகவில் இணைந்தார் மல்யுத்த வீரர் தி கிரே காளி!

Published

on

தொலைக்காட்சிகளில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் மல்யுத்தத்தில் கலந்து கொண்ட இந்திய வீரர்களில் ஒருவர் த கிரேட் காளி என்பது அனைவரும் அறிந்ததே.

அமெரிக்கர்கள் மட்டுமே பெரும்பாலும் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் த கிரேட் காளி மிகவும் சிறப்பாக விளையாடினார் என்பதும் அண்டர்டேக்கர் உள்பட மிகவும் புகழ்பெற்ற வீரர்களை விட அனாயசமாக அடித்து சாய்க்கும் வீரராக இந்த கிரேட் காளி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் கிரேட் காளி மல்யுத்த போட்டியில் ஓய்வுக்கு பின்னர் அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

இன்று டெல்லியில் நடந்த பாஜக கூட்டமொன்றில் தி கிரேட் காளி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தே கிரேட் காளிக்கு பாஜகவில் முக்கிய பதவி ஒன்று வழங்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version