கிரிக்கெட்

இந்தியாவுக்கு இருக்கும் வாய்புகள்.. இறுதி போட்டிக்கு தகுதி பெற போட்டி போடும் அணிகள்.. இதுதான் நிலைமை@

Published

on

ஐபிஎல் தொடர் நடக்கும் போது ப்ளே ஆப் சுற்றுகள் நெருங்கும் நேரத்தில் ஒவ்வொரு ஐபிஎல் அணியின் ரசிகர்களும் ஒரு கணக்கை கையில் எடுத்துக்கொண்டு எந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்பது குறித்து விவாதித்துக்கொண்டு இருப்பர். புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அணிக்கு கூட அவர்களின் கணக்கு படி ப்ளே ஆப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை கண்டுபிடிப்பார்கள். இப்போது அதே போல தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதி போட்டிக்கு எந்த அணி தகுதி பெரும் என உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கணக்கு போட தொங்கிவிட்டனர்.

இந்த விவாதத்தை இப்போது திடீரென தொடங்கி வைத்தது ஆஸ்திரேலிய அணியின் முடிவு தான். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய அணி தள்ளி வைத்து விட்டது.இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்திலேயே தங்கி விட்டதால் இரண்டாம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இதனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் நியூசிலாந்துடன் மோத போகும் அணி எது என்பது தான் விவாத பொருளாக மாறியுள்ளது. புள்ளிகள் பட்டியலில் இப்போது நியூசிலாந்து 70 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 69.2 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒருவேளை தென் ஆப்ரிக்க தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இருந்தால் நியூசிலாந்துக்கு இணையாக வந்திருக்க முடியும். இப்பொது அந்த வாய்ப்பை இழந்துவிட்டது.

இந்தியாவின் நிலை என்ன ?

புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி தற்போது 71.7 சதவிகிதம் மற்றும் 430 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் விளையாடும் ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். இந்தியாவுக்கு இப்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 70 புள்ளிகள் தேவைப்படும், அப்போதுதான் ஆஸ்திரேலியாவை விட முன்னணியில் இருக்க முடியும், இறுதி போட்டிக்கும் தகுதிபெற முடியும். இதனால் இந்த தொடரில் இந்தியா குறைந்தது 2-1 எனும் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் 2-0, 2-1, 3-0, 3-1 அல்லது 4-0 என்கிற க ணக்கில் வெற்றி பெற்றாலும் இந்தியாவால் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.

இங்கிலாந்துக்கு வாய்ப்பு உள்ளதா?

புள்ளிகள் பட்டியலில் 68.7 சதவிகிதத்துடன் நான்காவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு இறுதி போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பு உள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி குறைந்தது 3 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ள இங்கிலாந்துக்கு இந்த தொடரில் 89 புள்ளிகள் தேவைப்படும். அதன்படி, 3-0, 3-1 அல்லது 4-0 என்கிற கணக்கில் இங்கிலாந்து இந்த தொடரை கைப்பற்றினால் அந்த அணி இறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள முடியும்.

ஆஸ்திரேலியாவுக்கு கூட வாய்ப்புள்ளது:

முன்பு சொன்னது போல மிகவும் பின் தங்கியிருக்கும் அணிக்கு கூட இந்த கால்குலேஷன் படி வாய்ப்புகள் கிடைக்கும். இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் 0-0, 1-1 அல்லது 2-2 என்கிற கணக்கில் முடிவடைந்தால் இந்தியாவின் PCT சதவிகிதம் ஆஸ்திரேலியாவை விட குறைவாக மாறிவிடும். அதே போல இந்தியா இந்த தொடரை 1-0 எனும் கணக்கில் கைப்பற்றினாலோ, அல்லது இங்கிலாந்து 1-0, 2-0 மற்றும் 2-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்றாலோ இந்தியாவின் புள்ளிகள் சரிந்து ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு தகுதி பெரும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version