இந்தியா

பள்ளிகள் திறப்பதற்கு முக்கிய நிபந்தனை விதித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ஒரு சில மாநிலங்கள் பள்ளிகள் திறக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு இந்தியாவில் பள்ளிகள் திறப்பு முதல் மாநிலம் பஞ்சாப் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பஞ்சாப் மாநில கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது. இதன்படி பஞ்சாப் மாநில மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக அவர்களது பெற்றோரிடம் இருந்து கடிதம் வாங்கி வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதம் தெரிவிப்பதாக பெற்றோர்கள் கடிதத்துடன் வரும் மாணவ மாணவிகள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திட்டவட்டமாக பஞ்சாப் மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவ மாணவிகள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதல் பஞ்சாப் மாநிலத்தில் திறக்கப்படும் பள்ளிக்ளின் நேரம் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version