தமிழ்நாடு

பிரபல எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம் காலமானார்: எழுத்தாளர்கள் இரங்கல்

Published

on

பிரபல எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

கடந்த 1942-ம் ஆண்டு பிறந்த லட்சுமி ராஜரத்தினம் அவர்கள் சுமார் 1500க்கும் அதிகமான சிறுகதைகளையும், 300க்கும் மேற்பட்ட நாவல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி தொலைக்காட்சி நாடகங்கள், மெகா தொலைக்காட்சி தொடர்களையும், ஆன்மீக கட்டுரைகள், சரித்திர சிறுகதைகளும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீக சொற்பொழிவுகளிலும் அவர் புகழ் பெற்றவர் என்பதும் அவரது பேச்சுக்கு மயங்காதவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டாக்டர் பட்டம் பெற்ற அவர் ஏராளமான ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார். லட்சுமி ராஜரத்தினம் அவர்கள் எழுதிய நூல்களில் ’இதயகோயில்’ ’அகலிகை காத்திருந்தாள்’ ’பாட்டுடைத் தலைவி’ ’அவள் வருவாளா’ போன்ற நாவல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக லட்சுமி ராஜரத்தினம் அவர்கள் தினசரி நாளிதழ், வார நாளேடுகளிலும் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம் அவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். லட்சுமி ராஜரத்தினம் அவர்களுக்கு ஒரே ஒரு மகள் உள்ளார் என்பதும் ராஜஸ்யாமளா என்ற அவர் பரத நாட்டிய கலைஞராகவும் எழுத்தாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version