கிரிக்கெட்

பெண்கள் ஐபிஎல் வீராங்கனைகளின் ஏலம் எப்போது? ஸ்மிருதி மந்தனா எடுக்க போட்டா போட்டி!

Published

on

இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம் நடைபெற்றது என்பதும் இந்த ஏலத்தில் ரூ.4669 கோடி பிசிஐக்கு கிடைத்தது என்பது தெரிந்தது.

ஆண்கள் ஐபிஎல் போட்டி கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அணிகளின் ஏலத்தில் கிடைத்த தொகையை விட இந்த தொகை அதிகம் என்பதால் பெண்கள் ஐபிஎல் மிகப்பெரிய சாதனை படைத்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் பெண்கள் ஐபிஎல் அணிகளின் ஏலம் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக வீராங்கனைகளின் ஏலம் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான செய்திகளின்படி வீராங்கனைகளின் ஏலம் பிப்ரவரி 10 அல்லது 11-ம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா தாக்கூர் ஆகிய முக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளை ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் ஆர்வத்துடன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஸ்மிருதி மந்தனா அதிக தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் உலகின் முக்கிய நாடுகளில் உள்ள வீராங்கனைகளும் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை இந்த தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 7 அணிகளில் 5 அணிகள் ஏலம் விடப்பட்டது.

அகமதாபாத் அணியை அதானி குரூப் ரூ.1289 கோடிக்கு எடுத்துள்ளது. மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ரூ.901 கோடிக்கும், டெல்லி அணியை , டெல்லி கேபிடல்ஸ் ரூ.810 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு கேப்ரி குளோபல் ஏலம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் பெண்கள் ஐபிஎல் அணிகளின் ஏலம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷ தனது டுவிட்டரில் கூறியதாவது: “இன்று கிரிக்கெட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். மொத்த ஏலத்தில் ரூ.4669.99 கோடியை நாங்கள் பெற்றோம். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள். இது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியின் தொடக்கத்தை குறிக்கிறது. நமது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்திற்கும் ஒரு மாற்றமான பயணத்திற்கு வழி வகுக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version