உலகம்
திவாலானது உலகின் பழமையான இரண்டாவது விமான நிறுவனம்!
உலகின் இரண்டாம் பழமையான விமான நிறுவனமான ஏவியான்கா திவாலானதாக அமெரிக்க நிதிமனறத்தில் தெரிவித்துள்ளது.
கொலம்பியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஏவியான்கா 1919-ம் ஆண்டு முதல் விமான சேவை வழங்கி வந்தது.
2014-ம் ஆண்டு ஏவியான்கா நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 14 டாலராக இருந்தது. திங்கட்கிழமை 1 டாலருக்கும் குறைவாகச் சரிந்து 88 சென்ட்களாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து மார்ச் மாதம் முதல் விமான சேவையை நிறுத்தி இருந்த இருந்த ஏவியான்கா, கடந்த இரண்டு மாதங்களாக தங்களது ஊழியர்களுக்குச் சம்பளத்தை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.