இந்தியா

அடுத்த ரவுண்டு வேலை நீக்கம்.. பைஜூ நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

Published

on

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த பைஜூ நிறுவனம் தற்போது மேலும் 1000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முன்னணி கல்வி செயலி நிறுவனமான பைஜூ கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் லாபத்துடன் இயங்கி வந்தது. பெங்களூரை தலைமை இடமாகக் கொண்ட பைஜூ நிறுவனம் கடந்த 2022 நவம்பர் மாதம் 22 பில்லியன் மதிப்புள்ள நிறுவனமாக செயல்பட்டு வந்தது.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் ஸ்பான்ஸராக இருந்த நிறுவனம் அதற்காக ரூ.330 கோடி செலவுகள் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் நிறுவனம் என்ற பெயர் பெற்றிருந்த பைஜூ நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வருவாய் எட்டிய நிலையில் 2021 ஆம் ஆண்டிலிருந்து இறங்கு முகத்தில் இருந்தது.

குறிப்பாக மத்திய குழந்தைகள் உரிமைகள் அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பைஜூ நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியது. இந்நிறுவனம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை முறைகேடாக தங்களது நிறுவனத்தின் கல்வியில் சேர வைப்பதாக குற்றஞ்சாட்டி ருந்தது.

இதன் பின்னர் தான் இந்நிறுவனத்துக்கு இறங்குமுகம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் வருவாய் மிகப்பெரிய அளவில் குறைந்த நிலையில் 2500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் பைஜூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பைஜூ ரவீந்திரன் அவர்கள் தங்களது நிறுவனத்தில் இனிமேல் பணிநீக்க நடவடிக்கை இருக்காது என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது மேலும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version