இந்தியா

இந்தியாவில் கிடைத்துள்ள லித்தியம்.. உலகின் தலை சிறந்ததில் ஒன்று.. சீனா எல்லாம் ஓரம்போ!

Published

on

இந்தியாவின் முதல் லித்தியம் இருப்பு ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்டுள்ளது என சுரங்கத்துறை செயலாளர் அமித் சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லித்தியம் இருப்பானது உலகின் தலை சிறந்ததாகவும் உள்ளது.

World’s Best Quality Lithium Reserve Fund In Jammu and Kashmir

பொதுவான தரமான லித்தியம் என்றால் ஒரு மில்லியனுக்கு 220 பாகங்கள் என கணக்கிடப்படுகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்டுள்ள லித்தியம் இருப்பில் ஒரு மில்லியனுக்கு 500 பாகங்கள் உள்ளன.

மேலும் அவற்றின் அளவு 5.9 மில்லியன் டன். இது சீனாவில் உள்ள லித்தியம் இருப்பை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லித்தியமானது எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தும் பேட்டரிகளில் உள்ள முக்கிய மூலப்பொருளாகும்.

இப்போது இந்தியாவில் லித்தியம் தேவை முழுவதும் இறக்குமதி மூலமாக மட்டுமே நடைபெற்று வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version