உலகம்

கொரோனா காலத்திலும் 2 மடங்கு உயர்ந்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு: ஏழைகளின் நிலை?

Published

on

கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக ஏழை எளியவர்கள் அன்றாட செலவுக்கு கூட கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரு மடங்கு உயர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா தாக்கத்தின் இரண்டு ஆண்டுகளில் பல நாடுகள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் உலகின் முதல் பத்து பணக்காரர்கள் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளதாக உலகப் பொருளாதார மாநாட்டில் ஆக்ஸ்பார்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு பணக்காரர்களின் சொத்து மதிப்பை கணக்கீடு செய்த நிலையில் உலகின் முதல் பத்து செல்வந்தர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளதாக தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது. குறிப்பாக ஒரு நாளைக்கு சராசரியாக 1.3 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதல் பத்து பணக்காரர்கள் சம்பாதித்து உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் கொரோனா காலத்தில் போதுமான சுகாதார வசதி மற்றும் வேலை இல்லாத காரணத்தினால் வறுமையால் மட்டும் பல ஏழை எளியவர்கள் உயிரை மாய்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா ஊரடங்கு நேரத்தில் மட்டும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பசி, பட்டினியால் உயிரிழந்ததாகவும் அந்த அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைவர், அமேசான் தலைவர், கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்கள், பேஸ்புக் தலைவர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர், வாரன் பஃபெட் உள்ளிட்ட பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரு மடங்கு அதிகரித்த நிலையில் ஏழை எளியவர்களின் அன்றாட வருமானம் கூட இல்லாத நிலையை இருந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Trending

Exit mobile version