இந்தியா

உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் 2 இந்திய நகரங்கள்.. அவை எவை?

Published

on

2021-ம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலைப் பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் 50 இடத்திற்குள் 2 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

டிஜிட்டல், ஆரோக்கியம், தனிநபர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், கட்டுமானம் என 76 குறியீடுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 60 நகரங்களை மட்டும் இதில் ஆய்வு செய்துள்ளனர். 2015-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், டென்மார்க்கை சேர்ந்த கோபன்ஹேகன் நகரம் 100-க்கு 82.4 புள்ளிகள் பெற்று 2021-ல் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தை 82.2 புள்ளிகளுடன் டொராண்டோ நகரம் பெற்றுள்ளது.

சிங்கப்பூர் 80.7 புள்ளிகளுடன் 2021-ல் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

சிட்னி 80.1 புள்ளியுடன்2021-ல் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோ 80 புள்ளியுடன் 5வது இடத்தில் உள்ளது. 2019-ம் ஆண்டு இந்த பட்டியலில் டோக்கியோ முதலிடத்திலிருந்தது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் 79.3 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளது.

நியூசிலாந்தின் வெலிங்டன் நகரம் 79 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது.

ஹாங் காங் 78.6 புள்ளிகளுடன் 2021-ல் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

தென் ஆஸ்தியேலியாவில் உள்ள மெல்பேர்ன் நகரம் 9வது பாதுகாப்பு நகரமாக உள்ளது.

ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோல்ம் நகரம் 78 புள்ளிகளுடன் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.

உலகின் டாப் 50 பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் மும்பை மற்றும் டெல்லி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version