இந்தியா

இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறப்பு.. அதிர்ச்சி அளிக்கும் உலகச் சுகாதார அமைப்பு!

Published

on

உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்: உலகில் ஒரு ஆண்டிற்கு 5,29,000 பெண்கள் பிரசவத்தின் போது இறப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் 25.7 சதவீதம் பேர் அதாவது 1,36,000 பேர் இந்தியாவில் மட்டும் உயிரிழக்கின்றனர் என்று உலகச் சுகாதார அமைப்புக் கூறுகிறது.

மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மிகுதியான இரத்தப்போக்கால் உயிரிழக்கிறார்கள். குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 500 மி.லி அல்லது 1000 மி.லி இரத்தம் இழப்பு ஏற்படுவதே பெரும்பாலும் இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 2011-13 ஆண்டுகளில் இறப்பு விகிதம் என்பது, 1 லட்சம் பிறப்புகளுக்குச் சுமார் 167 இறப்புகள். 1.2 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தினசரி 12 மில்லியன் யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது.

ஆனால் 9 மில்லியன் யூனிட் இரத்தம் மட்டுமே தற்போது பெறப்பட்டு வருகிறது.

இரத்த மேலாண்மை குறித்துப் போதிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் இல்லாததே இதற்குக் காரணம் என்று உலகச் சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது போன்ற இறப்புகளைத் தடுக்க வேண்டுமானால், இரத்த தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும். இது குறித்த போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அதிகபட்ச இறப்புகளைப் பதிவு செய்வது அசாம் மாநிலம் என்றும் கேரளாவில் மிகவும் குறைவான இறப்புகளே பதிவு செய்யப்படுகிறது.

Trending

Exit mobile version