வணிகம்

கொரோனா காலத்திலும் ரூ.60,000 கோடி முதலீடுகளை வாரிக் குவிக்கும் ஜியோ!

Published

on

கொரோனா பேரழிவால் உலக பொருளாதாரமே சரிந்து வருகிறது. ஆனால், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஆயிரம் கணக்கான கோடிகளை முதலீடாகப் பெற்று வருகிறது. ஆம், ஒரு மாதத்திற்குள் 4 பெரும் நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளது ஜியோ. அவை குறித்து விளக்கமாக இங்கு பார்க்கலாம்.

ஜெனரல் அட்லாண்டிக்

பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 1.34 சதவீதம் பங்குகளை 6,598.38 கோடி ரூபாய் கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது.

விஸ்டா ஈக்விட்டி

விஸ்டா ஈக்விட்டி நிறுவனம் 11,000 கோடி ரூபாய் கொடுத்து ரிலையன்ஸ் ஜியோவின் 2.32 சதவீத பங்குகளை வாங்க உறுதி அளித்துள்ளது.

சில்வர் லேக்

அமெரிக்க தனியார் ஈக்விட்டி நிறுவனமான சில்வர் லேக் 50000 கோடி ரூபாயை ஜியோவில் முதலீடு செய்து 1.15 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

பேஸ்புக்

உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், ஜியோவின் 9.9 சதவீத பங்குகளை 44,000 கோடி ரூபாய் கொடுத்து வங்கியுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 60,000 கோடி ரூபாய் முதலீடுகளைப் பயன்படுத்தி ஜியோ சாவன், ஜியோ சினிமா, ஹாப்டிக், ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் உள்ளிட்ட வணிக பிரிவுகளின் வர்த்தகத்தை பெருக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு செய்துள்ளது.

இவை மட்டுமல்லாம, சவுதி அரேபியாவின் ஆரம்கோ உட்பட பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை ஈப்பதற்காக முயற்சியில் ரிலையன்ஸ் உள்ளது. இப்படி வரும் முதலீடுகள் மூலமாக, ரிலையன்ஸ் விரைவில் கடன் இல்லா நிறுவனமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version