பிற விளையாட்டுகள்

உலகக்கோப்பை கால்பந்து.. இன்று முதல் நாக்-அவுட் சுற்றுகள், தகுதி பெற்ற அணிகள் எவை எவை?

Published

on

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் நாக்-அவுட் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20ஆம் தேதி கத்தார் நாட்டில் தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன. 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இருந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 8 பிரிவுகளில் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளின் விவரங்கள் பின்வருமாறு:

குரூப் ஏ: நெதர்லாந்து , செனகல்

குரூப் பி: இங்கிலாந்து, அமெரிக்கா

குரூப் சி: அர்ஜென்டினா, போலந்து

குரூப் டி: பிரான்ஸ், ஆஸ்திரேலியா

குரூப் ஈ: ஜப்பான், ஸ்பெயின்

குரூப் எப்: மொராக்கோ , குரோஷியா

குரூப் ஜி: பிரேசில், சுவிட்சர்லாந்து

குரூப் எச்: போர்ச்சுக்கல், தென் கொரியா

இந்த நிலையில் இரண்டாவது சுற்றான நாக்அவுட் சுற்று இன்று முதல் தொடங்குகிறது. இதில் விளையாடும் 16 அணிகளில் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் போட்டிகள் பின்வருமாறு:

நெதர்லாந்து – அமெரிக்கா (இரவு 8.30)

அர்ஜென்டினா – ஆஸ்திரேலியா (நள்ளிரவு 12.30)

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறிய அணிகள்: க்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி, கோஸ்டாரிகா, பெல்ஜியம், கனடா, கேமரூன், செர்பியா, உருகுவே, கானா

seithichurul

Trending

Exit mobile version