பிற விளையாட்டுகள்

உலகக்கோப்பை கால்பந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்ற முக்கிய அணிகள்: முழு விபரங்கள்

Published

on

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் லீக் போட்டிகள் முடிவடைந்து நாக்-அவுட் போட்டிகள் தொடங்கின என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நாக்-அவுட் சுற்றுகளில் ஏற்கனவே நெதர்லாந்து, அர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று குரோஷியா மற்றும் பிரேசில் ஆகிய இரண்டு முக்கிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இன்று நடைபெற்ற பிரேசில் மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான போட்டியில் பிரேசில் மிக அபாரமாக விளையாடி 4 கோல்கள் போட்டது. அதை அடுத்து 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து குரோஷியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் டை பிரேக்கர் முறையில் குரோசியா வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இதனை அடுத்து மொராக்கோ மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு இடையிலான போட்டி இன்றும், நாளை சுவிட்சர்லாந்து மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற உள்ளது. இந்த இரு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காலிறுதி போட்டியில் பிரேசில் – குரேசியா, நெதர்லாந்து – அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து – பிரான்ஸ் ஆகிய நாடுகள் மோதவுள்ளன. டிசம்பர் 9ஆம் தேதி முதல் காலிறுதி போட்டிகல் தொடங்க உள்ளது என்பதும் அரையிறுதி போட்டிகள் டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு எட்டு முப்பது மணிக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை, காலிறுதி, சாம்பியன்,

seithichurul

Trending

Exit mobile version