கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 2022: முழு அட்டவணை!

Published

on

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்பதும் இந்த போட்டியின் முழு அட்டவணை சற்றுமுன் ஐசிசி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான அட்டவணையில் இந்தியா தனது முதல் போட்டியை வழக்கம்போல் பாகிஸ்தானுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த உலக கோப்பை கிரிக்கெட் டி20 தொடரிலும் முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் மோதி தோல்வியடைந்த நிலையில் இந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இரண்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் குரூப்பில் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் இரண்டாவது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா அணிகளும் உள்ளன.

இந்தியா போட்டிகளின் விபரங்கள்:

23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்பேர்ன்)

27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)

30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)

2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)

6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)
நவம்பர் 9ஆம் தேதி முதல் அரையிறுதி

நவம்பர் 10ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி

நவம்பர் 13ஆம் தேதி இறுதிப்போட்டி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணை இதோ:

seithichurul

Trending

Exit mobile version