உலகம்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு!

Published

on

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நிலையிலும் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு, அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 362,209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 117,431,004 என அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் .2,604,786 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 39,586 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனையடுத்து அமெரிக்காவில் மொத்தம் 29,693,869 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் இதுவரை 537,826 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் உள்ள இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் இந்தியாவில் மொத்தம் 11,229,271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவை அடுத்து பிரேசிலில் நேற்று 80,024 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பிரேசிலில் மொத்தம் 11,019,344 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக கொரோனா பாதிப்பில் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, துருக்கி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version