உலகம்

ஒருநாள் கொரோனா பாதிப்பு: உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

Published

on

இந்தியாவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 345,147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2,621 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்தியாவில் 2,550,788 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 146,218,354 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், உலகம் முழுவதும் கொரோனாவால் 146,218,354 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது, உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 146,218,354 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 65,483 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். பிரான்சில் 32,340 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும் அந்நாட்டில் மேலும் 332 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் புதிதாக 8,840 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும், 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் கொரோனாவுக்கு 398 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version