வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை!

Published

on

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) நிறுவனத்தில் காலியிடங்கள் 02 உள்ளது. மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 02

வேலை: Mamager (Engg)

மாதம் சம்பளம்: ரூ.37,700

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ருமெண்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. இதனை “The General Manager, K.T.D.C.M.P.U. Ltd”, என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வரையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager, K.T.D.C.M.P. Union Limited, 55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 600023.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://aavinmilk.com/hrkt130219.html என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2019

seithichurul

Trending

Exit mobile version