வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை!

Published

on

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) திருச்சியில் காலியிடங்கள் 13 உள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிங்கள்.

நிர்வாகம்: திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்)

மொத்த காலியிடங்கள்: 13

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: ஓட்டுநர் – 04
கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ. 5200 – 20,200

வேலை: துணை மேலாளர் – 04
கல்வித்தகுதி: மேலாண்மை, நிர்வாகம் போன்ற துறைகளில் பிபிஏ, எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாதம் சம்பளம்: ரூ. 9,300 – ரூ.34,800

வேலை: மேலாளர் – 05
கல்வித்தகுதி: எம்பிஏ, கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாதம் சம்பளம்: ரூ.9,300 – 39,100
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Tiruchirappalli District Co-operative Milk Producers’ Union Limited, Pudukkottai Road, Kottapattu Trichy – 620 023.

மேலும் முழு விபரங்களை அறியக்கொள்ள http://www.aavinmilk.com/hrtryapp050219.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 22.02.2019

Trending

Exit mobile version