வேலைவாய்ப்பு

உங்களுக்காகக் காத்திருக்கும் தமிழ்நாடு வன சீருடையில் வேலை வாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தாம் (TNFUSRC), வனத்துறையில் கீழ்க்காணும் பதவிகளுக்கான நேரடி நியமனம், இணையவழித் தேர்வு மூலமாக நடத்தப்படும்.

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 1,178 பணியிடங்களுக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வனத் துறையில் காலியாக உள்ள வனவர் 300, மாத ஊதியமாக ரூ.35,900 – 1,13,500 –மும், வனக் காப்பாளர்கள் 726 மாத ஊதியமாக ரூ.18,200 -57,900-மும், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 152 மாத ஊதியமாக ரூ.18,200 -57,900-மும், பணியிடங்களுக்கு அக்டோபர் 15ம் தேதி காலை 10 மணி முதல் நவம்பர் 5ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு ‘’www.forests.tn.gov.in’’ இணையதள முகவரியை அணுகவும், விண்ணப்பங்களை இணையவழி மூலம் 15.10.2018 காலை 10.00 மணி முதல் 05.11.2018 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Trending

Exit mobile version