இந்தியா
வொர்க் ஃபிரம் திருமணம்; மணமேடையிலும் லேப் டாப்புடன் மணமகன் – வைரல் வீடியோ
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் பல மாநிலங்களிலும் தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஐ.டி செக்டர் நிறுவனங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாகவே மூடப்பட்டுள்ளது.
எனவே, அதில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே பணிபுரிந்து வருகின்றனர். எனவே, எப்போதும் அவர்கள் கையில் லேப்டாப்புடன் காணப்படுகின்றனர். வீட்டில் இருந்தே பணிபுரிவதால் அவர்களுக்கு வேலை பளுவும் மிகவும் அதிகமாக கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், திருமண மேடையில் மணமகன் ஒருவர் லேப்டாப்பில் பணிபுரியும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானது. இதனை பகிர்ந்து ‘Work from home கேள்விப்பட்டிருப்போம். இது Work from wedding’ என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram