இந்தியா

மீண்டும் இந்தியாவில் ‘வொர்க் ப்ரம் ஹோம்? முன்னணி இந்திய ஐடி நிறுவனங்கள் திட்டம்!

Published

on

கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இரண்டு வருடங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வந்ததையடுத்து பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ‘வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறையை கடைபிடித்தது என்பது கடந்த ஆண்டு பாதிக்கு மேல் தான் வொர்க் பிரம் ஹோம் என்ற நடைமுறையை ரத்து செய்யப்பட்டு மீண்டும் அலுவலகம் வர அலுவலர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருவதாகவும் இதனை அடுத்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் உருவாகியிருக்கும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இந்திய ஐடி நிறுவனங்கள் மீண்டும் ‘வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறையை அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தமுள்ள 5 வேலை நாட்களில் மூன்று நாள் அலுவலகத்திலும் இரண்டு நாள் ‘வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையிலும் முதல்கட்டமாக பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த 40 நாட்கள் இந்தியாவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளதை அடுத்து ஒரு சில நிறுவனங்கள் முழுமையாக ‘வொர்க் ப்ரம் ஹோம் முறையை கடைபிடிக்க உள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ‘வொர்க் ப்ரம் ஹோம் நடை முறையை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிய நிலையில் தற்போது அந்நிறுவனங்கள் கூட ‘வொர்க் ப்ரம் ஹோம் குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம் என்ற வகையில் ‘வொர்க் ப்ரம் ஹோம் முறையை நடைமுறைப்படுத்த அனைத்து நிறுவனங்களும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version