பர்சனல் ஃபினான்ஸ்

‘Work-from-home’ செய்கிறீர்களா? உடனே இதை படிங்க!

Published

on

மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்து இருந்தாலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இன்று வரை Work-from-home கீழ் தான் ஊழியர்களிடம் வேலை வாங்கி வருகின்றன.

கொரோனா தடுப்பூசி போடும்வரை Work-from-home கீழ் ஊழியர்கள் பணி செய்தால் கூட போதும் என்று சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஊரடங்கின் போது சில நிறுவனத்தில் ஊழியர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே தொடர்ந்து ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் என்று கூறியுள்ளனர்.

இப்படி இருக்கும் நிலையில், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்குப் பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய, இணையதள இணைப்பு, டேபிள், யூபிஎஸ், மானிட்டர் போன்றவற்றுக்கான பணத்தையும் வழங்குகின்றன. இந்த தொகைக்கு வரி பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இவற்றுக்கு வரி விலக்கு பெற முடியும்.

எப்படி என்று கேட்டால், நீங்கள் வாங்கிய இணையதள இணைப்பு, டேபிள், யூபிஎஸ், மானிட்டர் போன்றவற்றுக்கான பில்களை நிறுவனத்தின் பெயரில் பெற்று இருக்க வேண்டும். இந்த பொருட்கள் எல்லாம் நல்ல பிராண்ட் ஸ்டோர்கள் அல்லது ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள கடைகளில் வாங்க வேண்டும்.

மேலும் தினமும் 50 ரூபாய்க்கு உணவு பில்லையும் நிறுவனத்தின் பெயரில் பெற்று வரி செலுத்தும் அளவை குறைக்க முடியும்.

seithichurul

Trending

Exit mobile version