இந்தியா

சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை.. வொர்க் ப்ரம் ஹோம் தான் வேண்டும்: இந்தியர்களின் மனநிலை!

Published

on

கடந்த 2 ஆண்டுகளாக வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணிபுரியும் நிலை அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய ஊழியர்களின் பெரும்பாலான மனநிலை வொர்க் ப்ரம் ஹோம் என்பது தான் என்றும் அதனால் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருக்கிறார்கள் என்றும் கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று இதுகுறித்து எடுத்த கருத்துக் கணிப்பில் 17 நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேர் தொழிலாளர்களை ஆய்வு செய்து கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் பத்தில் ஏழு பேர் தாங்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை விரும்புவதாகவும் அதில் தங்களுக்கு கூடுதல் வசதி கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். வொர்க் ப்ரம் ஹோம் முறையின் போது வேலை நேரத்தின் போது கட்டுப்பாடு எங்களுக்கு இல்லை என்றும் நெகிழ்வுத்தன்மை இருப்பதாகவும் வீடு மற்றும் அலுவலகம் இடையே மாறி மாறி சென்று வேலை செய்வது தங்களுக்கு அதிக சோர்வை கொடுப்பதாகவும் ஊதியம் ஓரளவு குறைந்தாலும் பரவாயில்லை வொர்க் ப்ரம் ஹோம் முறையை தங்களுக்கு வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் சுமார் 70 சதவீத ஊழியர்கள் புதிய வேலை தேடுவார்கள் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதை அடுத்து வொர்க் ப்ரம் ஹோம் முறையை அமல்படுத்த பல நிறுவனங்கள் ஆலோசித்து கொண்டிருக்கும் நிலையில் ஊழியர்களின் மன நிலையும் வொர்க் ப்ரம் ஹோம் முறையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வொர்க் ப்ரம் ஹோம் முறையை அமல்படுத்துவதில் நிறுவனங்களுக்கும் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அலுவலக வாடகை மின்சாரக் கட்டணம் உள்பட பல செலவுகள் குறையும் என்றும் அதற்கு பதிலாக ஊழியர்களுக்கு இன்டர்நெட் பயன்பாட்டிற்கு என குறிப்பிட்ட தொகை வழங்கினால் போதுமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் எதிர்காலத்தில் ஒரு சில துறைகள் தவிர மற்ற அனைத்து துறைகளிலுமே வொர்க் ப்ரம் ஹோம் முறையை அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version