இந்தியா

மீண்டும் கொரோனா பரவல்… மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு!

Published

on

கொரோனாவுக்கு பின்னர் வொர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை அதிகரித்துள்ளது. ஆனால் கொரானாவின் தாக்கம் வெகுவாக குறைந்த பின்னர் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வந்து பணிபுரிய வலியுறுத்தி வருகிறது. எல்லாம் மீண்டும் சகஜ நிலைக்கு வந்துவிட்ட பின்னர் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது மீண்டும் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது.

Work from home

முகக்கவசம் அணியுமாறு அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. மருத்துவமனைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என பல இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தற்போது 4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 23,091 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வழக்கறிஞர்கள் ஹைபிரிட் முறையை தேர்வு செய்யலாம். ஆன்லைன் மூலமாக ஆஜராகலாம். ஆன்லைன் மூலமாக வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டாலும் நாங்கள் விசாரணையை நடத்துவோம் என வொர்க் ஃப்ரம் ஹோம் முறைக்கு ஆதரவாக பேசினார்.

seithichurul

Trending

Exit mobile version