வேலைவாய்ப்பு

இந்திய தேசிய தகவல் மையத்தில் வேலை!

Published

on

மத்திய அரசின் இந்திய தேசிய தகவல் மையத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 495. இதில் சயின்டிஸ்ட், டெக்னிக்கல் உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

விளம்பர எண்: NIELIT/NIC/2020/1

நிறுவனம்: இந்திய தேசிய தகவல் மையம் (National Informatics Centre)

மொத்த காலியிடங்கள்: 495

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Scientist-‘B’ Group ‘A’
காலியிடங்கள்: 288
மாத சம்பளம்: ரூ. 56100 – 1,77,500

வேலை: Scientific/Technical Assistant – ‘A’ Group ‘B’
காலியிடங்கள்: 207
மாத சம்பளம்: ரூ. 35400 முதல் 1,12,400 வரை.

கல்வித்தகுதி: எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கணினி அறிவியல், கம்யூனிகேஷன், கணினி மற்றும் நெட்வொர்க்கிங் பாதுகாப்பு, கணினி பயன்பாடு, மென்பொருள் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம், தகவல்
தொழில்நுட்ப மேலாண்மை, கணினி மேலாண்மை, சைபர் சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பிஇ, பி.டெக் அல்லது எம்.எஸ்சி., எம்.எஸ்., எம்சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 30 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வேலைக்குத் தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.calicut.nielit.in/nic என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.800 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.calicut.nielit.in/nic/documentformats/DetailedAdvertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.03.2020

seithichurul

Trending

Exit mobile version