தமிழ்நாடு

அடித்து சொல்லுவேன்.. பாமக வந்தால்.. கூட்டணியில் இருக்க மாட்டேன்.. திமுகவிற்கு திருமா மெசேஜ்!

Published

on

சென்னை: கடந்த சில நாட்களாக திமுகவுடன் பாமக கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தது. இந்த நிலையில்தான் பாமக – திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று விசிக வெளிப்படையாக தெரிவித்து உள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக, அதிமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்தது இருந்தது. அதிமுகவில் வலிமையான தலைமை இல்லை. தொண்டர்களை அவர்கள் கட்டுப்படுத்தவில்லை. அதுதான் எங்கள் தோல்விக்கு காரணம். அதனால் அவர்களின் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று கூறி இருந்தார்.

அதோடு சமீபத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இதிலும் அதிமுகவை அன்புமணி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதில், , அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. நாம்தான் உண்மையான எதிர்க்கட்சி. சிலர் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்பதை போல வலுவாக சத்தம்தான் போட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பாமகவின் வலிமை தெரியவில்லை.

மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போதும் குரல் கொடுத்து வரும் ஒரே கட்சி பாமகதான். பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை உடனே நிறைவேற்று கிறார் என்றார். இதன் மூலம் எங்கே பாமக – திமுக நெருங்கி வருகிறதோ என்ற கேள்வி எழுந்தது. அதிமுக பாமக – மோதல் காரணமாக, பாமக திமுக நெருங்கி வருகிறதோ என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்தான் பாமக – திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று விசிக வெளிப்படையாக தெரிவித்து உள்ளது. நேற்று சென்னையில் பாஜகவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக எம்பி திருமாவளவன்.. பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இருக்க மாட்டோம்.

அது திமுக கூட்டணியாக இருந்தாலும். இந்தியாவில் யாருக்காவது இப்படி சொல்ல தைரியம் இருக்கிறதா? ஆனால் இதை திருமா சொல்லுவான். பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது கனவிலும் நடக்காது என்று கூறி உள்ளார். இதனால் பாமக திமுக கூட்டணியில் இணைந்தால் விசிக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறும் என்பது உறுதியாகிறது.

seithichurul

Trending

Exit mobile version