தமிழ்நாடு

மகளிருக்கான ரூ. 1000 மார்ச் மாதம் அறிவிப்பு: ஈரோட்டில் முதல்வர் அதிரடி பிரச்சாரம்!

Published

on

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் ஈரோட்டில் தீவிர இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

#image_title

இன்று திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே பிரச்சாரத்தை தொடங்கினார். மக்கள் வெள்ளத்தின் நடுவே திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்து வரும் அவர் தமிழக பெண்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற மகளிருக்கான மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் இன்று.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர், திமுக கூட்டணி அளித்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். குறிப்பாக மகளிருக்கான மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் வரவுள்ள நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும். நிதிநிலை சரியாக இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்த உடனேயே இதனை நிறைவேற்றி இருப்போம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் கூறியது போல சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம். இன்னும் ஒருபடி மேலே போய் சொல்லாததையும் செய்வோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை நீங்கள் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.

Trending

Exit mobile version