இந்தியா

பெண்களுக்கான பாதுகாப்பான நகரத் திட்டம், ரூ.2,919கோடி செலவு செய்யும் மோடி அரசு!

Published

on

நிர்பயா நிதி கீழ் 8 நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்தினை 2,919.55 கோடி ரூபாய் செலவில் தொடங்க இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அதில் அதிகபட்சமாகப் பெங்களூருவிற்கு 667 கோடி ரூபாயும், டெல்லிக்கு 663.67 கோடி ரூபாயும், சென்னைக்கு 425.06 கோடி ரூபாயும், ஹைதராபாத்திற்கு 282.50 கோடி ரூபாயும், மும்பைக்கு 252 கோடி ரூபாயும், அகமதாபாத்திற்கு 253 கோடி ரூபாயும், கொல்கத்தாவிற்கு 181.32 கோடி ரூபாயும், லக்னோவிற்கு 195 கோடி ரூபாயும் என நிதி ஒதுக்கி அளிக்கப்பட உள்ளது.

நகரப் பாதுகாப்பு திட்டமானது முனிசிபல் கார்ப்ரேஷன், காவல் துறை உள்ளிட்டோருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கீழ் தெரு விளக்கு, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவை போன்றவை உறுதி செய்யப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான மந்திரியுமான விரேந்திர குமார் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version