இந்தியா

தங்கத்தின் மவுசு குறைந்துவிட்டதா? வீடுகள் வாங்க விரும்பும் பெண்கள்..!

Published

on

தங்கம் வாங்குவதில் பெண்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள் என்றும் நகைக்கடைகளில் பெண்கள் கூட்டம் தான் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஆனால் தற்போதைய இளைய தலைமுறை பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விட வீடுகள் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று தெரிவித்துள்ளது

இதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வீடுகள் விலை உயர்ந்து வருவதாகவும் வீடு வாங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலீடு செய்வதற்கு தங்கத்தை விட வீடு தான் சிறந்தது என பெண்கள் நினைக்கின்றார்கள் என்றும் 36 சதவீதம் பெண்கள் வீடுகள் வாங்குதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான பெண்கள் ரூ. 45 லட்சத்திற்கு மேல் விலையுள்ள வீடுகளையே வாங்க விரும்புகின்றனர். அனாரோக் நடத்திய ஆய்வின்படி, வீடு தேடுபவர்களில் 36 சதவீதம் பேர் ரூ. 45-90 லட்சம் பட்ஜெட்டில் உள்ள வீடுகளைப் பார்க்கிறார்கள், 27 சதவீதம் பேர் ரூ. 90 லட்சம்-1.5 கோடி விலையுள்ள பிரீமியம் வீடுகளை விரும்புகிறார்கள், 20 சதவீத பெண்கள் 1.5 கோடிக்கு மேல் விலையுள்ள சொகுசு வீடுகளுக்கு செல்கிறார்கள். 45 லட்சத்துக்கும் குறைவான விலையுள்ள மலிவு விலை வீடுகள் பெண்கள் விரும்புவதில்லை என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டூகளில் பெண்கள் ஒரு பெரிய குடியிருப்பு ரியல் எஸ்டேட் வாங்க, குறிப்பாக நகர்ப்புற மையங்கள் தான் அவர்களின் விருப்பத்தேர்வுகளாக உள்ளன. அனாரோக் குழுமத்தின் துணைத் தலைவர் சந்தோஷ் குமார் இதுகுறித்து கூறியபோது, ‘வீடு வாங்கும் பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள், 48 சதவீதம் பேர் தயாரான வீடுகளை விரும்புகிறார்கள், அவர்களில் 45 சதவீதம் பேர் 12 மாதங்களுக்குள் தயாராக இருக்கும் வீடுகளைத் தேடுகிறார்கள். அளவைப் பொறுத்தவரை, 50 சதவீத பெண்கள் 3BHK வீடுகளை விரும்புகிறார்கள், 33 சதவீதம் பேர் வீடுகளையும், 10 சதவீதம் பேர் மட்டுமே 4BHK வீடுகளையும் விரும்புகிறார்கள்.

பெண்கள் இப்போது முதலீட்டிற்காக சொத்துக்களை வாங்கினாலும், 77 சதவீதம் பேர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற விருப்பத்தாலும், 23 சதவீதம் பேர் முதலீட்டிற்காகவும் வீடுகளை வாங்குகிறார்கள் என்றும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் வீடு வாங்குவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள். பெண்களுக்கு குறைந்த கடன் விகிதங்கள், குறைந்த முத்திரை வரி, PMAY சலுகை மற்றும் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட வீட்டுக் கடன் ஆகியவைகள் ஆகும். 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (PMAY) திட்டத்தின் கீழ் வீடுகளை வாங்கினால் அந்த வீடுகள் கட்டாயமாக ஒரு பெண்ணின் பெயரில்தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒரு பெண்ணின் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டிருந்தால் முத்திரைக் கட்டணம் குறைவாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்தில் முத்திரை கட்டணங்களில் வேறுபாடு இருந்தாலும் 1-2 சதவீதம் வரை பெண்களுக்கு சலுகை உண்டு. மேலும், எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி போன்ற வங்கிகள் பெண்களுக்கு வீட்டுக் கடன் சலுகைகளை வழங்குகின்றன. இது வங்கிக்கு வங்கி மாறுபடும் என்றாலும் வட்டி விகிதம் சுமார் 0.25 சதவீதமாக பெண்களுக்கு குறைவாக இருக்கும்.

எனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த தங்கத்தின் மீதான ஈர்ப்பு தற்போது பெண்கள் மத்தியில் குறைந்து வருவதாகவும், 65 சதவீத பெண்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புவதாகவும், 20 சதவீதம் பேர் பங்குச் சந்தைகளை விரும்புவதாகவும் இந்த ஆய்வு அறிக்கையின் முடிவுகள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version