உலகம்

அடிக்கற சூட்டை வச்சி ஆப் பாயில் போட்ட பெண்மணி… வைரல் வீடியோ…

Published

on

உலகில் கோடை காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. இந்தியா உட்பல பல வெளிநாடுகளிலும் கூட இப்போதும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாக மதிய நேரத்தில் சூரியன் சுட்டெரிக்கும் போது, தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால் ஆப் ஆயிலாகவே மாறிடும். அடிக்கற சூட்ல சமையல்லே செஞ்சிடலாம் என பலரும் பேச்சுக்காக சொல்வதுண்டு. தற்போது அது உண்மையாக மாறியுள்ளது.

கொளுத்தும் வெயிலில் ஒரு தட்டை வைத்து அதில் ஒரு பெண்மணி முட்டையை உடைத்து ஊற்ற சூடில் அது ஆப் ஆயிலாக மாறும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 2.69 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த வீடியோவுக்கு ‘கதாரில் வசிக்கும் மக்கள்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நாட்டை சேர்ந்த ஒரு பெண் இதை பகிர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version