உலகம்

சீரீயல் கில்லர் சோப்ராஜ் அருகே உட்கார்ந்து விமான பயணம்: ஒரு பெண்ணின் திகில் அனுபவம்!

Published

on

பிரபல சீரியல் கில்லர் சோப்ராஜ் கடந்த 19 ஆண்டுகளாக நேபாள நாட்டின் சிறையில் தண்டனை அனுபவித்த நிலையில் சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் நேபாளத்திலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு விமானத்தில் சென்றபோது அவர் அருகில் உட்கார்ந்த பெண் ஒருவர் பயத்துடன் பதிவு செய்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோப்ராஜ் என்பவர் 11 நாடுகளில் குற்றங்களை செய்துள்ளார் என்பதும் 11 நாடுகள் அவரை தேடி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் அவர் கொலை செய்தது பிகினி அணிந்த இளம் பெண்கள் என்பதால் இவரை பிகினி கொலையாளி என்றும் அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1971ஆம் ஆண்டு மும்பையில் பிடிபட்ட சோப்ராஜ் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் திகார் சிறையில் அவர் தனக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி அங்கிருந்து தப்பினார். இந்த பிரச்சனை அன்று நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சனையாக எதிரொலித்தது.

இதனை அடுத்து அவரை நேபாள காவல்துறையும் தேடி வந்த நிலையில் நேபாள போலீசாரால் கைது செய்யப்பட்டார். அங்கு அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்ததும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நேபாளத்திலிருந்து தனது சொந்த நாடான பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறினார். அப்போது அவர் அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணொருவர் மிகுந்த பயத்துடன் அவர் தான் சோப்ராஜ் என்று தெரிந்தவுடன் மிகுந்த பயத்துடன் காணப்பட்டார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு செய்துள்ளார். தனது அருகில் உட்கார்ந்து இருக்கும் நபர் சீரியல் கில்லர் என்பதை அறிந்ததும் தான் அதிர்ச்சி அடைந்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்துடன் கூடிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version