இந்தியா

உபெர் பெண் டிரைவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published

on

உபேர் நிறுவனத்தில் பணி செய்யும் பெண் டிரைவர் ஒருவரை பீர் பாட்டில் மற்றும் கற்களால் மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஓலா உபேர் ஆகிய நிறுவனங்களில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் என்ற இடத்தில் பயணி ஒருவரை ஏற்றுக் கொண்டு உபேர் பெண் டிரைவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஒரு கும்பல் அவரது காரை வழிமறித்து கற்களை வீச தொடங்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து அச்சமடைந்த பெண் டிரைவர் காரை வீட்டு கீழ் இறங்கி காரில் உள்ள சேதங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அவஐ இரண்டு ஆண்கள் பிடித்து அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி அவரது மொபைல் ஃபோனையும் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கொள்ளையர்களிடம் இருந்து போராடிய அவர் அந்த மொபைல் போனை மீட்டார். இதனை அடுத்து காரின் சாவியை பறித்துக்கொண்டு காரில் அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாகவும் ஆனால் திடீரென அவர்கள் அந்த முடிவை கைவிட்டு விட்டு காரில் இருந்த பொருட்களை மட்டும் கொள்ளை அடித்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட பெண் டிரைவரின் மார்பு கழுத்து ஆகிய பகுதிகளை படுகாயம் அடைந்ததாகவும் இதனை அடுத்து அவர் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரை காவல்துறையினர் மீட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் டிரைவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தாக்குதல் நடந்த அடுத்த நிமிடமே பீதி பொத்தானை அழுத்தியதாகவும் ஆனால் அது தனக்கு உதவவில்லை என்றும் கூறினார். அதிகாலை இரண்டு மணிக்கு தான் போலீசார் வந்தனர் என்றும் அதன் பிறகு தான் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உபேர் நிறுவனத்தின் அதிகாரி கூறிய போது பெண் ஓட்டுநருக்கு நடந்த சம்பவம் பயங்கரமானது என்றும் நாங்கள் அவரை மருத்துவமனையில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலத்தை விசாரித்து வருகிறோம் என்றும் அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பெண் டிரைவருக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்றும் அவரது மருத்துவ செலவுகள் முழுவதும் இன்சூரன்ஸ் மூலம் ஈடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில் முழு ஆதரவு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் கூறுவர் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version