இந்தியா

இண்டர்நெட் இருக்கு, பாப்கார்ன் இருக்கு, சானிடரி நாப்கின் இல்லை.. பிவிஆர் குறித்து கோபமான பெண்ணின் டுவிட்

Published

on

சமீபத்தில் பிவிஆர் திரையரங்குக்கு சென்ற ஒரு பெண் தனது தோழிக்கு திடீரென மாதவிடாய் ஏற்பட்டு விட்டதாகவும் அந்த வளாகத்தில் சானிடரின் நாப்கின் கிடைக்கவில்லை என்றும் கோபமாக தனது ட்விட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொது இடங்களில், பொதுமக்கள் அதிகமாக வருகை தரும் இடங்களில் சானிடரி நாப்கின் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக மகளிர் அமைப்பினர் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பொது இடங்களில் சானிடரி நாப்கின் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தான் இருந்து வருகிறது. நாட்டின் ஜனத்தொகையில் பாதிக்கு மேல் இருக்கும் பெண்களின் பிரச்சனைகளை தீர்க்க எந்த திரையரங்கு உரிமையாளர்களும் மால் உரிமையாளர்களும் முன்வரவில்லை என்றே குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பிவிஆர் திரையரங்கிற்கு சென்ற பெண் ஒருவர் தனது தோழிக்கு திடீரென மாதவிடாய் ஏற்பட்டதாகவும் அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாக வந்ததை எடுத்து சானிடரி நாப்கின் அந்த வளாகத்தில் கிடைக்குமா என்று தான் தேடி அலைந்ததாகவும் ஆனால் ஒரு இடத்தில் கூட அதற்கான வசதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சானிடரி பேட்கள் விற்பனை செய்வதோ அல்லது அதற்கான இயந்திரம் நிறுவனம் எந்த வசதியும் அவ்வளவு பெரிய பிவிஆர் மாலில் இல்லை என்பது பெரும் ஆச்சரியத்தையும்ன் கோபத்தையும் ஏற்படுத்தியது என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

மேலும் பிவிஆர் வளாகத்தில் பணிபுரியும் எந்த ஊழியர்களும் தங்களுக்கு உதவ முன் வரவில்லை என்றும் இது மிகவும் சீரியசாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிவிஆர் வளாகத்தில் இன்டர்நெட் கிடைக்கிறது, பாப்கார்ன் கிடைக்கிறது ஆனால் அத்தியாவசிய பொருளான சானிடரி நாப்கின் கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய துரதிஷ்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் குறிப்பாக திரையரங்குகள், மால்கள் ஆகியவற்றில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் வைப்பதன் மூலம் பொது மக்களுக்கும் பயனாக இருக்கும் அவர்களுக்கும் வருமானம் வருவதாக இருக்கும் என்றும் இது குறித்து அனைத்து நிறுவனங்களும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெண்ணின் கோபமான டுவீட்டுக்கு சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். அடிப்படை தேவையை கண்டிப்பாக மால்கள் திரையரங்குகள் செய்ய வேண்டும் என்பதுதான் பலரது கமெண்ட்ஸ்களாக இருந்தது.

 

seithichurul

Trending

Exit mobile version