உலகம்

அரசு பணத்தை ரூ.1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற 48 வயது பெண்.. எப்படி தெரியுமா?

Published

on

இத்தாலி நாட்டின் அரசு பணத்தை ரூபாய் 1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற பெண் ஒருவர் பிடிபட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் தான் இரு கண்களும் செயல் இழந்தவர் என்று பார்வையற்றவர் போல் நடித்து அரசின் நலன்களை கடந்த 15 ஆண்டுகளாக பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் தனது தொலைபேசியை ஸ்க்ரோல் செய்வதை சிசிடிவி மூலம் பார்த்த அரசு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 48 வயதான மோசடி செய்த பெண் முற்றிலும் பார்வையற்றவர் என்ற போலி காரணத்தின் கீழ் சுமார் 2,08,000 யூரோக்கள் அரசிடமிருந்து நல உதவியாக பெற்றுள்ளார். இந்த பணம் இந்திய மதிப்பில், ரூபாய் 1.8 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 ஆண்டுகளாக சமூக பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் ஊனமுற்றோர் நலங்களுக்காக அவர் இந்த பணத்தை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இத்தாலி நாட்டின் அரசு நிறுவனங்களில் ஒன்று அவர் ஸ்மார்ட் போனை ஸ்க்ரோல் செய்வதையும், ஆவணங்களை சிரமம் இன்றி படிப்பதையும் சிடிசிபி மூலம் பார்த்ததை அடுத்து அவர் மோசடியாளர் என கண்டுபிடித்தது. இதனை அடுத்து அவர் மீது சந்தேகம் அடைந்து அவரை பின்தொடர்ந்து விசாரித்த போது அவர் பார்வையற்றவர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அந்த பெண் மீது அரசுக்கு எதிராக மோசடி செய்தவர் என்ற குற்றச்சாட்டு வழக்கு சம்பந்தப்பட்டது. அதுமட்டுமின்றி அவருக்கு பார்வையற்றவர் என்று சான்று அளித்த இரண்டு மருத்துவர்கள் இடமும் விசாரணை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக தான் பார்வையற்றவர் என்று பொய்யான சான்றிதழ் அளித்து அரசின் பணத்தை மோசடி செய்த அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு உண்மையான பார்வையற்றவருக்கு கிடைக்க வேண்டிய தொகையை அவர் பறித்துக் கொண்டதாகவே இந்த வழக்கு கருதப்படும் என்றும் அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதோடு அவருக்கு சான்றளித்த இரண்டு மருத்துவர்களின் மருத்துவ சான்றிதழை ரத்து செய்யவும் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version