தமிழ்நாடு

பெண்ணின் திருமண வயது உயர்வு: சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு!

Published

on

பெண்ணின் திருமண வயது 18 என்று தற்போது இருக்கும் நிலையில் அந்த வயது வரம்பை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்த சட்டத்திருத்தம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும் பெண்களுக்கான உரிமையை அதிகரிக்கவும் பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோரிக்கைகள் நிபுணர்கள் குழுவின் மூலம் ஆலோசனை செய்து தற்போது பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெண்ணின் சட்டபூர்வமான திருமண வயது 18லிருந்து 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து குழந்தை திருமண தடைச்சட்டம், சிறப்பு திருமண சட்டம், இந்து திருமண சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் திருமண வயது 18லிருந்து 21 வயதாக உயர்த்தியதற்கு அனைத்து கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் 21 வயதுக்கு குறைவான பெண்ணுக்கு திருமணம் செய்தால் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்பது குறிப்பிடதக்கது.

Trending

Exit mobile version