இந்தியா

மெட்ரோ ரயில் வாசலில் நின்ற பெண், மூட முடியாத தானியங்கி கதவுகள்: அதிகாரியின் ஸ்மார்ட் நடவடிக்கை

Published

on

மெட்ரோ ரயிலின் வாசலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததால் தானியங்கி மூட முடியாமல் இருந்தது. இதனை அதிகாரிகள் சுட்டிக் காட்டி அந்த பெண்ணை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியும் அந்த பெண் கீழே இறங்கவில்லை. அதன் பின் அந்த அதிகாரி எடுத்த ஸ்மார்ட் முடிவு காரணமாக ரயில் கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் மெட்ரோ ரயில்கள் எப்போதும் பிஸியாக சென்று கொண்டு இருக்கும் என்பதும் பெரும்பாலும் பயணிகள் நின்று கொண்டுதான் பயணம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று மும்பை மெட்ரோ ரயிலில் ஏறிய ஒரு பெண் இடம் இல்லாத காரணத்தினால் வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நின்று கொண்டிருந்தன் காரணமாக தானியங்கி கதவு மூட முடியாமல் இருந்தது.

தானியங்கி கதவு மூடாததால் ரயிலும் கிளம்ப வில்லை. இதனையடுத்து அந்த பெண்ணை இறங்கும்படி சக பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த பெண் தனக்கு அலுவலகம் செல்ல காலதாமதம் ஆகிவிட்டது என்றும் ரயிலில் இருந்து இறங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ரயிலில் இருந்து இறங்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அந்த பெண் பிடிவாதமாக இறங்கவில்லை.

இதனை அடுத்து ஒரு அதிகாரி அந்தப் பெண்ணுக்கு தான் சீட்டு தருவதாக கூறி இறங்கும்படி கூறினார். அதனை அடுத்து அந்த பெண் இறங்கிய நிலையில் அவருக்கு ரயில் எஞ்சினில் டிரைவர் அருகே உள்ள விஐபி சீட்டில் அவரை உட்கார வைத்தார். அதன் பின்னரே ரயில் கிளம்பியது.

இந்த சம்பவம் காரணமாக ஒரு சில நிமிடங்கள் ரயில் தாமதமாக ஆனது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 8 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இது குறித்து ஏராளமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன.

தவறு செய்த ஒரு பெண்ணுக்கு அபராதம் விதிக்காமல் அவருக்கு விஐபி அந்தஸ்து கொடுத்து உள்ளதாக சிலர் விமர்சனம் செய்தனர். ஆனால் அதே நேரத்தில் அந்தப் பெண்ணுக்கும் உள்ளே இடம் கிடைக்குமாறு பயணிகள் சற்று நடந்திருக்கலாம் என்றும் அவரை மட்டுமே குற்றம் சொல்வது சரியில்லை என்றும் கூறி வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version