வைரல் செய்திகள்

கணவரை நாய் போல் சங்கிலி கட்டி வாக்கிங் சென்ற பெண்!

Published

on

 

கனடாவில் கணவரை நாய் போல் பாவித்து, சங்கிலி கட்டி வாக்கிங் கூட்டிச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவின் கியூபெக் நகரில் கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையின்றி வெளியில் யாரும் செல்லக்கூடாது, நடைபயிற்சி தேவைப்படுகிறவர்கள் தனியாக செல்ல வேண்டும், தேவைப்பட்டால் வளர்ப்பு பிராணிகளை கூட்டிச் செல்லலாம் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி தன் கணவரோடு வெளியே செல்ல விரும்பினார். இதற்காக ஊரடங்கு நிபந்தனைகளை ஒவ்வொன்றாக பார்த்து, செல்லப்பிராணிகளுடன் வாக்கிங் செல்லலாம் என்ற வசதியை தேர்ந்தெடுத்தார்.

ஆனால், செல்லப்பிராணி என்ற பெயரில் தன் கணவருக்கு நாய் போல கழுத்தில் கயிறு கட்டி, வீதி வீதியாக கூட்டிச் சென்றார். இதனைக் கண்ட அங்கிருந்த போலீசார் எச்சரித்தனர். ஆனால், அந்த பெண்மணியோ செல்லப்பிராணிகளை கூட்டிச் செல்லாம் என்ற நிபந்தனையின்படியே என் கணவரை கூட்டி வந்துள்ளேன் என்று வாதாடினார். அதற்கு அவரது கணவரும் நாய் போல முகபாவணையை வைத்துக் கொண்டார்.

இதில் கடுப்பான போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும், கொரோனா விதிமுறைகளை மீறியதாக இருவர் மீதும் அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகைள மேற்கொண்டனர்.

Trending

Exit mobile version