Connect with us

இந்தியா

Paytm மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.. அதுமட்டுமா? விரிவான தகவல்!

Published

on

இந்தியாவில் கோடி கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பணப்பரிமாற்ற செயலிகளில் ஒன்று Paytm என்பதும் இந்த செயலி மூலம் தற்போது ஆன்லைன் பொருள்கள் வாங்குவது, சினிமா டிக்கெட் எடுப்பது உள்பட பல பயன்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் Paytm செயலி தற்போது ஐஆர்சிடிசி உடன் ஒப்பந்தம் செய்துள்ளதை அடுத்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் அது மட்டுமின்றி ரயில்கள் எங்கே வந்து கொண்டிருக்கின்றன? பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் உள்பட பல்வேறு தகவல்களையும் Paytm மூலமே இனி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தற்போது டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பதும் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் Paytm மூலம் ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது, ரயில் எங்கே வந்திருக்கின்றது என்ற நிலையை பார்ப்பது, பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்வது, டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் உடனடியாக பணத்தை திரும்ப பெறுவது, எந்த ரயில் எந்தெந்த பிளாட்பாரத்தில் இருக்கிறது என்பதை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தெரிந்து கொள்ளலாம்.

எனவே இனி Paytm வாடிக்கையாளர்கள் இதன் மூலமே ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Paytm செயலியை பயன்படுத்தி அருகில் உள்ள ரயில் நிலையங்கள் எங்கே இருக்கின்றன என்றும் தெரிந்து கொள்ளலாம். மேலும் ரயில்கள் தாமதமாக வருகின்றதா? எத்தனை நிமிடங்கள் தாமதமாக வருகிறது? என்பதையும் சரிபார்க்கலாம்


தமிழ் உள்பட பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் இந்த பயன்பாடு உள்ளது என்பதும் 24 மணி நேரமும் இந்த உதவியை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு வெவ்வேறு ஒதுக்கீட்டில் டிக்கெட்டுகளையும் முன் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் Paytm மூலம் ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.

முதலில் Paytm செயலி அல்லது paytm.com/train-tickets என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதன் பின் பயணத்தின் தேதியை உள்ளிட்டு, கிடைக்கக்கூடிய ரயில்களைத் தேட “தேடல்” என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் ரயிலைத் தேர்ந்தெடுத்து இருக்கையின் இருப்பை சரிபார்க்கவும்.
இருக்கை, வகுப்பு மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, “புக்” என்பதை கிளிக் செய்து, உங்கள் IRCTC உள்நுழைவு ஐடியை பதிவு செய்ய வேண்டும்.

அடுத்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, புக் என்பதைக் கிளிக் செய்யவும்.

இப்போது உங்களுக்கு விருப்பமான பயணத்திற்கான டிக்கெட்டுக்குரிய பணம் செலுத்த வேண்டும்.

உங்கள் முன்பதிவை முடிக்க, நீங்கள் IRCTC இணையதளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.

டிக்கெட் முன்பதிவு செய்தவுடன், டிக்கெட்டை pdf பதிவிறக்கம் செய்யலாம். Paytm உங்கள் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் ஐடிக்கு உங்கள் டிக்கெட்டுகளின் முழு விவரங்களை மின்னஞ்சல் அனுப்பும்.

Paytm செயலி மூலம் PNR நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

Paytm செயலி அல்லது இணையதளம் சென்று > ரயில் டிக்கெட்டுகள் > PNR நிலை என்பதற்குச் செல்லவும்

தேடல் பெட்டியில் உங்கள் PNR எண்ணை உள்ளிடவும்.

இப்போது PNR நிலையை சரிபார்க்கும் பட்டனை கிளிக் செய்யவும்.

உங்கள் PNR நிலை திரையில் காட்டப்படும்.

Paytm செயலியில் நேரலை ரயில் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது?

Paytm app> ரயில் டிக்கெட்டுகள்> என்பதற்குச் சென்று ரயில் எண் அல்லது ரயிலின் பெயரை உள்ளிடவும்.

உங்கள் போர்டிங் ஸ்டேஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

போர்டிங் தேதியை உள்ளிட்டு “நேரடி நிலையை சரிபார்க்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!